+2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு..!!

26 February 2021, 10:42 am
+2 exam apply - updatenews360
Quick Share

சென்னை: +2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மே மாதம் நடைபெற இருக்கும் +2 பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் முதல் மார்ச் 6ம் தேதி வரையிலான நாட்களில் அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேற்சொன்ன நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அடுத்த மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் சிறப்பு அனுமதி முறையில் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 10

0

0