கோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு!!

12 June 2021, 7:33 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கோவை மாவட்டம் தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

கடந்த 2 வாரமாக கோவையில் தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வந்தது. கடந்த வாரம் பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் குறைந்தது. இந்த நிலையில் இன்று 2 ஆயிரத்துக்கும் குறைவான வர்களுக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்றைய நிலவரப்படி கோவையில் ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2 ஆயிரத்து 283 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 18 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து ஆயிரத்து 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதல் அலையின் போது கோவை மாவட்டத்தில் உயிரிழப்பு மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால், இரண்டாம் அலை துவங்கியது முதல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரை, கோவையில் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தோரின் அதிகபட்ச எண்ணிக்கை 62ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 27 உயிரிழந்துள்ளனர். அதன்படி கோவையில் இதுவரை உயிரிழந்தவர்களின் 1716 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 189

0

0