மாநிலங்களிடையே போக்குவரத்து இயக்கப்படுமா? அமைச்சர்கள் கூறிய தகவல்!!

23 August 2020, 3:37 pm
Minister Talks - Updatenews360
Quick Share

கோவை : மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இயக்குவது சவாலான காரியம் என அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை துவக்கிய பின் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவயங்கள் தயாரிப்பு நிலையங்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர்.

பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்டத்தில் விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது என விஜயபாஸ்கர் கூறினார்.

கோவையில் முதல் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்கள் விகிதம் 78 சதவிகிதமாக உள்ளது. கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 5,865 படுக்கைகள் அரசு மற்றும் தனியார் சிகிச்சை மையங்களில் உள்ளது. தேவைப்பட்டால் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

சளி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கோவையில் நடத்தப்பட்ட 6112 காய்ச்சல் முகாம்களில் 1902 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் மாநிலங்களிடையே போக்குவரத்து தளர்வுற்று கட்டுப்படுத்த சவாலான விஷயமாக இருக்கும் என்றும்,
அரசு வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் கட்டாயம் தனிநபர் இடைவெளியை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அரசு ஊக்குவிப்பதில்லை என்று கூட்டாக தெரிவித்தனர்.

Views: - 1507

0

0