மனைவி, மகளுக்கு கொரோனா : மனிதநேயமற்ற முறையில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை… அதிமுக கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2021, 4:07 pm
Admk Condemn -Updatenews360
Quick Share

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி மற்றும் மகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதநேயமற்ற முறையில் சோதனை நடைபெற்று வருவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையிட்ட வருகின்றனர். இந்த சோதனை தமிழகம் முழுவதும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த தகவல் அறிந்ததும் சென்னை, திருச்சி, கோவை,புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிமுகவினர் குவிந்தனர்.

இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில உள்ள விஜயபாஸ்கர் வீட்டிற்கு அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான பாபு முருகவேல், மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்து வந்ததால் அவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட்வில்லை. இந்த நிலையில் போலீசாரிடம் ஆதிராஜாராம் வாக்குவாதத்தல் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாபு முருகவேல், அதிமுக பொன்விழா கொண்டாடி வரும் சூழலில் வேண்டுமென்றே பொய்யான சோதனையை திமுக நடத்தியுள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோமு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம் என கூறிய அவர், விஜயபாஸ்கர் மனைவி மற்றும் மகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதநேயமற்ற முறையில் சோதனை நடத்தி வருவதாக கூறினார்.

இதையடுத்து பேசிய ஆதிராஜாராம், திமுக ஆட்சி முறையற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்த செந்தில் பாலாஜிக்கே பதவியளித்துள்ளதாகவும், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்ச திமுக மட்டுமே என சுட்டிக்காட்டினார்.

Views: - 474

0

0