நீலகிரி, மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் விபத்தில் காயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் நேற்று (நவ.25) இரவு இருசக்கர வாகன விபத்து ஒன்று நிகழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்து உள்ளனர். இதையடுத்து, அவர்களை சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சேர்த்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், அது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இது குறித்து கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்துன் உள்ளார்.
அதில், “ஒரே நேரத்தில் 2 பேர் விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஒருவருக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றொருவருக்கும் உடனடியாக சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை செவிலியர்கள் தங்கும் அறையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அந்த அறையில் நேற்று மாலை Short circuit ஆகி மின்விளக்கு பழுதானது. எனவே, அவசரம் கருதி அவருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், செவிலியர் அறையில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேநேரம், வழக்கமாக சிகிச்சை அளிக்கப்படும் அறையில் மின்சாரத் துண்டிப்பு ஏற்படவில்லை” எனக் கூறி உள்ளார்.
முன்னதாக, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி இடுகொரையைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது, மின்தடை காரணமாக மருத்துவமனை இருளில் மூழ்கியதால், டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே ‘மனிதன்’ பட பாணியில் சம்பவம்.. சாலையோரத்தில் இருந்த 5 தமிழர்கள் உயிரிழப்பு!
இது தொடர்பாக மருத்துவர்கள் அப்போது கூறுகையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக டார்ச் லைட் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டாலும், இடைப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பரப்பி உள்ளதாகக் கூறினர். இது தற்போது அதே மாவட்டத்தில் தொடர்கதையாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
This website uses cookies.