‘கிப்ட்’ ஆக வந்த இன்னோவா..! : கெத்தாக வந்து இறங்கிய பா.ஜ.க தலைவர்..!

Author: kavin kumar
26 August 2021, 9:58 pm
Quick Share

கோவை: தெற்கும் சட்டமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதால் இங்குள்ள மாவட்ட தலைவர் நந்தகுமாருக்கு பாஜக சார்பில் இன்னோவா கார் பரிசாக வழங்கியதை தொடர்ந்து கோவை பா.ஜ.க நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பா.ஜ.க 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து 4 தொகுதிகள் இருக்கும் மாவட்ட தலைவர்களுக்கு பா.ஜ.க தலைமை இன்னோவா கார் பரிசாக வழங்கியது. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமாருக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று மாலை 5 மணிக்கு பரிசாக வழங்கப்பட்ட இனோவா கார் கோவை மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு பார்வைக்கு வைப்பதாகவும் அதைப் பார்வையிட தொண்டர்கள் நிர்வாகிகள் வர மாவட்ட பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்த பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி புதிய இன்னோவா காரில் மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் சாலையில் இயக்கி மகிழ்ச்சி அடைந்தனர். பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் காரின் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட கொண்டனர்.

Views: - 226

0

0