பூச்சி அரித்த பச்சரிசி.. பொங்கல் பரிசு தொகுப்பில் அதிர்ச்சி : தமிழக அரசு மீது மேலும் அதிருப்தி!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2022, 11:44 am
கோவை : பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசியில் பூச்சிகள் இருந்த நிலையில் மக்கிய வாசனையும் வருவதாக குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. குறிப்பாக பொங்கல் பரிசு தொகுப்பில் 19 பொருட்கள் மட்டுமே உள்ளது, ஆனால் பை மற்றும் கரும்பை சேர்த்து 21 பொருட்கள் என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே பொங்கலுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஊக்கத்தொகையை தற்போது திமுக அரசு நிறுத்தியுள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் பச்சரிசியில் சிறு பூச்சிகளும், மக்கிய வாசனையும் இருந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சில இடங்களில் இது போன்ற பச்சரிசி விநியோகம் செய்ததை கண்டு கடைகளுக்கு சென்று புகார் குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியது, ஒரு சிலர்தான் அரிசி சரியில்லை என்று கூறுகின்றனர், கொண்டு வந்தால் மாற்றி கொடுப்பதாக கூறியுள்ளளோம், ஆனால் இதுவரை யாரும் கொண்டு வரவில்லை.
பச்சரிசியில் மண், பூச்சி மற்றும் தரம் குறைவாக இருந்தால் வினியோகம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புகார் வந்தால் அரிசியை மாற்றி கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினர்.
இது குறித்து கோவை மாவட்ட வழங்க அலுவலர் கூறிய போது, அரிசியின் தரத்தில் எந்த குறையும் இல்லை, அதிகாரிகள் மேற்பார்வையில்தான் அனைத்து பொருட்களும் குடோனில் பேக் செய்யப்படுகிறது. இதுவரை எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
0
0