இன்ஸ்டாகிராம் காதலியால் இம்சை… கடலூர் காதலனால் பறி போன உயிர் : அதிர வைத்த திருப்பூர் சம்பவம்!!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சூளையை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்யஸ்ரீ. இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த சத்யஸ்ரீ, பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அங்கு வந்த நரேந்திரன் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது திடீரென இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்யஸ்ரீன் கழுத்தில் குத்திவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த சத்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சத்யஶ்ரீ உயிரிழந்தாக தெரிகிறது. நரேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சத்யஸ்ரீ இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான கடலூரை சேர்ந்த நரேந்திரன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் போன் மூலமாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சத்யஸ்ரீ நரேந்திரன் உடன் பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரன் கடலூரில் இருந்து பேருந்து மூலமாக திருப்பூர் வந்துள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது சத்யஸ்ரீ தெரிவித்த மருத்துவமனை முகவரியை கொண்டு நேரடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கும் போலீசார், தொடர்ந்து சிகிச்சையில் உள்ள நரேந்திரன் சுயநினைவுக்கு வந்து பேசினால் மட்டுமே, இந்த சம்பவத்திற்கான முழு காரணம் தெரிய வரும் என தெரிவித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.