பெரியார் சிலையை அவமதிப்பு : கைது செய்யப்பட்ட இருவர் மீது கடும் நடவடிக்கை தேவை.. கு.ராமகிருட்டிணன் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2022, 8:14 pm
Periyar Ku Ramakrishnan- Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி சாயம் பூசியும். அவமதித்த இந்து முன்னணி சார்ந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கைதாகியுள்ள இரண்டு நபர்களும் இந்து முன்னணியில் பொறுப்பில் உள்ளவர்கள்.

அவர்கள் நோக்கம் பெரியார் சிலையை அவமதிப்பது மூலம் அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்குவதே அவர்கள் நோக்கம்.

சிறப்பாக செயல்படுகின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும் களங்கம் கற்பிக்க திட்டமிடுகிறார்கள். ஆகவே தந்தை பெரியார், சிலையை தொடர்ந்து அவமரியாதை செய்து வருகிறார்கள். ஆகவே இந்தப் போக்கு தொடராமல் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்க கைது செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி நபர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 158

0

0