ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு.. காவித்துணி கட்டியதால் பரபரப்பு : குவிந்த காங்.,கட்சியினர்.. காத்திருந்த டிவிஸ்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan7 October 2021, 6:24 pm
கன்னியாகுமரி : ஆற்றூரில் ராஜீவ்காந்தி சிலைக்கு காவி துணி அணிவித்ததையறிந்து காங்கிரஸ் கட்சியினர் குவிந்தனர். காவித்துணி கட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை அமைக்கபட்டுள்ளது. இந்த சிலையில் திடீரென ராஜீவ்காந்தியின் கழுத்தில் காவி துணி சுற்றப்படிருந்தது.
இதையடுத்து தகவலறிந்த காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தி சிலையில் சுற்றப்படாடிருந்த காவி துணியை அகற்றினர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குனேரி எம்.எல்.ஏ வுமான ரூபி மனோகரன் மற்றும் மாவட்ட தலைவர் தாரகை கர்பர்ட் தலைமையில் காங்கிரஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் ராஜூவ்காந்தி சிலைக்கு மாலையணிவித்த பின் காவல்துறையினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அதைதொடர்ந்து தக்கலை சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆற்றூர் புளியமூடு பகுதியை சேர்த்த 44 வயதான சசி என்பதும் மனநலநோயாளியான இவர் தினமும் அந்த சிலையை சுத்தம் செய்பவர் எனவும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து காவல் துறை அவரை எச்சரித்து அனுப்பிவைத்தனர். எனினும் ராஜுவ்காந்தி சிலை மீது காவித்துணி கட்ட யாராவது சொல்லியிருப்பார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜீவ் காந்தி சிலைமீது மன நோயாளி ஒருவர் காவி துணி கட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0
0