சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்: ஒரு வாரத்தில் ரூ.36.53 லட்சம் அபராதம் ..!!

19 April 2021, 2:05 pm
chennai comisionor - updatenews360
Quick Share

சென்னை: 200 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன தனிக்கை நடைபெறும் என்று சென்னை சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இதுவனை சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் சுமார் 10,200 காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கையாக அரசு பல வழிமுறைகள் தெரிவித்துள்ளது. ஞாயிறு ஒருநாள் மட்டுமே ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடையவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா வைரஸ் வாய் மற்றும் மூக்கு வழியாக பாதிக்கும் எனவே முகக்கவசம் அணிய வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். விதிமுறைகளை மீறிவோருக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 54

0

0