நீலகிரியில் தொடரும் மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்…!!

Author: Aarthi
13 October 2020, 11:07 am
inocent divya - updatenews360
Quick Share

நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து நீடிக்கும் கனமழையால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகன விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும் மிகுந்த சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் பேரிடர் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள 456 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகளை விரைந்து மேற்கொள்ள ஜேசிபி இயந்திரங்கள் தயாராக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Views: - 44

0

0