பி.எஸ்.ஜி கல்லூரி சார்பில் சர்வதேச கருத்தரங்கு..! இணையதளம் மூலம் இணைந்தனர்!!

30 September 2020, 12:48 pm
PSG Conference - updatenews360
Quick Share

கோவை : பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் இன்டர்நேசனல் பிசினஸ் துறை சார்பில் ‘வேர்ல்ட் மேரிடைம் டே 2020’ என்ற தலைப்பின் கீழ் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் அங்குராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தோஹாவில் உள்ள கண்டெய்னர் ஃப்ரெட் ஸ்டேஷனை (Container Freight Station) சேர்ந்த முகமத் சாபித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இனையதளம் வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எல்.சி.ஐ கார்கோ ஷிப்பிங் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

சுற்றுசூழல் மற்றும் விலங்குநல ஆர்வலர் சுமைர் ஹண்டா பக்ஷி கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு சுற்றுசூழலை காப்பது குறித்தும் கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்டர்நேஷனல் பிசினஸ் துறை சார்பில் “PEN OF IBIANS” என்ற பெயரில் இணையதளப்பக்கம் தொடங்கப்பட்டது. மேலும், மாணவர்களிடம் உள்ள கற்பிக்கும் திறனை கண்டறிய புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த சர்வதேச இணையவழி கருத்தரங்கில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், துறை தலைவர் பாலமுருகன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 39

0

0