பஞ்சாயத்து தலைவர்களை பணி செய்ய விடாமல் இடையூறு : ஊராட்சி நிதியில் மாமூல் கேட்டு திமுக கவுன்சிலர் அடாவடி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 2:14 pm
DMK Councilor - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பஞ்சாயத்து தலைவர்களை பணி செய்ய விடாமல் ஊராட்சி பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மாமூல் தரக் கேட்டு தொந்தரவு செய்வதாக திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார் அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தரபுரம், திடல் ஆகிய பகுதிகளின் ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று 100க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்களுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

தோவாளை ஒன்றிய திமுக கவுன்சிலர் பூதலிங்கம்பிள்ளை மற்றும் அவருடைய ஆதரவாளர்களான சந்தானகுமார், குணா, குணசேகரன், ராஜாராம், சுப்பையன், ஐயப்பன் ஆகியோர் பஞ்சாயத்து அலுவலக நிதி சார்ந்த விவகாரத்தில் தலையிட்டு மாமூல் கேட்டு தங்களை பணி செய்ய விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக புகார் அளித்துள்ளனர்.

இது குறித்த புகார் மனுவில் தெரிவித்ததாவது, தோவாளை ஊராட்சி ஒன்றிய பகுதிகளான திடல், தெள்ளாந்தி, அந்தரபுரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுப்பட்டு வருவதாகவும், அங்கு ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் என்று தங்களை காட்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்,.

மேலும் ஊர்மக்களையும் மிரட்டியும் மேலும் பஞ்சாயத்து தலைவர் ராஜலட்சுமி என்பவரை தாக்கியது சம்பந்தமாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பஞ்சாயத்து தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிகழ்வதாக கூறி இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் திமுகவினர் தங்களின் பஞ்சாயத்து அலுவலக பணியில் தலையிடுவதை கண்டிக்க வேண்டும் என்றும் தாங்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Views: - 444

1

0