டெல்லியில் மட்டும் அல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான்: பாஜக மாநில செயலாளர் எச்.ராஜா பேட்டி

4 September 2020, 9:37 pm
Quick Share

மதுரை: டெல்லியிலும் பாஜக ராஜாதான் தமிழகத்திலும் பாஜக ராஜாதான் என்றும், இந்தியாவில் இரண்டு ஆன்மீக கட்சிகள் இருந்து ஒரே கொள்கையின் கீழ் கூட்டணி வைத்தால் தவறில்லை என பாஜக மாநில செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

மதுரை மாநகர் வடக்கு தொகுதி, மதுரை மத்திய தொகுதி பூத் கமிட்டி கூட்டம் கட்சியினரிடையே செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்தில் 44 ஆயிரம் கோவில்களில் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் வரும் தமிழக கோவில்களில் ஆண்டுதோறும் தமிழக அரசு தணிக்கை அதிகாரிகளை கொண்டு தணிக்கை செய்ய உட்படுத்த வேண்டும். இரண்டு ஆன்மீக கட்சிகள் ஒரே கொள்கையுடன் இருந்தால் கூட்டணி வைப்பதில் தவறில்லை.


ரஜினி ஆன்மீக அரசியல் எங்களுடன் இணைந்து செயல்படலாம், இல்லாமலும் அவருடை கொள்கை எங்கள் பாஜகவுடன் ஒத்து போகலாம். டெல்லியில் மட்டும் பாஜக ராஜா இல்லை தமிழகத்தில் இங்கும் பாஜக ராஜாதான். சசிகலா விடுதலை குறித்து கேட்டபோது, இம்மாதம் வருகிறார என்பது உங்களுக்கே தெரிகிறதே என்றார் கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களே என்றார். 3 தொகுதி இடைத்தேர்தல் பாஜக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, இது குறித்து பாஜக மாநில குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து அறிக்கை வெளியிடுவோம் என்றார்.

சசிகலா வந்தால் பாஜகவுடன் கூட்டணி தொடருமா பாஜக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்போம் அப்பாவுக்கு அண்ணனாக இருந்தால் பெரியப்பா என்போம். தம்பியாக இருந்தால் சித்தப்பா. தங்கையாக இருந்தால் அத்தை மட்டுமே, அத்தைக்கு மீசை முளைத்தால் பாஜக ஆதரவு தரும். என்றார்.

Views: - 0

0

0