தமிழகத்தில் முதல் முதலாக சித்த மருத்துவ கல்லூரி அமைக்க பணிகள் தீவிரம்: நாகர்கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!!

Author: Rajesh
20 March 2022, 6:16 pm
Quick Share

ரைட் டு பில் என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்படும் போது, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகர்கோவில் வருகை தந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருகை தந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி அலகினை திறந்து வாய்த்த அமைச்சர் பின்னர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மருத்துவ துறை சார்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மருத்துவ துறை அதிகார்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரைட் டு பில் என்ற திட்டம் உலகில் தாய்லாந்து, வியட்நாமில் உள்ளது இந்தியாவில் ஆசாமில் கொண்டுவரபட்டு உள்ளது.

ஆனால் அமல்படுத்தவில்லை, தமிழகத்தில் அந்த திட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு உள்ளது என்றும் தமிழகத்தில் முதல் முதலாக சித்த மருத்துவ கல்லூரி அமைக்க அலுவலக நிர்வாக பணிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில், மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் கன்னியகுமரியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புற்றுநோய் சிகிட்சை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கூடுதலாக கொண்டுவரப்பட்டு மருத்துவ கட்டமைப்பு அதிகரிக்கப்படும்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு கூடுதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கொலை முயற்சி உள்ளது. மக்களின் மன உளைச்சலை குறைக்கவும், தற்கொலை முயற்சியை தடுக்கும் விதமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ரைட் டு பில் அமல்படுத்தப்படும் போது, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதை தடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆய்வு கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Views: - 1239

0

0