நடுக்கடலில் கத்தியை காட்டி மிரட்டல் : தமிழக மீனவர்களின் வலைகளை பறித்து இலங்கை மீனவர்கள் அட்டூழியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 6:24 pm
Fisherman Theft -Updatenews360
Quick Share

இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் நாகை மீனவர்களை மிரட்டி 3 லட்சம் மதிப்புள்ள வலைகளை பறித்து சென்றுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீனவர் காலனியை சேர்ந்த அருட்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மணியன் தீவு கடற்கரைக்கு கிழக்கே சுமார் 15 மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் திடீரென தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, அதன்பின் கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காண்பித்து, மீனவர்கள் 4 பேரையும் மிரட்டி அவர்களது செல்போன், டார்ச் லைட், சிக்னல் லைட், 3000 ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ தட்டி சீலா மீன் பிடிக்கும் வலை ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்து உயிர் தப்பி வந்த மீனவர்கள் இன்று காலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்துள்ளனர். பின் இது குறித்து கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 202

0

0