குறுக்கே வந்தால் கொன்றுவிடுவேன் : மணல் கொள்ளையர்களை 10 கி.மீ தூரம் விரட்டி சென்ற இளைஞர்களுக்கு மிரட்டல்..சேஸிங் செய்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 6:31 pm
Thittakkudi Sand Theft -Updatenews360
Quick Share

கடலூர் : திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அப்பகுதி இளைஞர்கள் பைக்கில் துரத்தி சென்ற காட்சிகள் இணையத்தில் வைலராகி வருகிறது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொழுதூர் வெள்ளாற்றில் இருந்து மணலை நிரப்பிக்கொண்ட மகேந்திரா பொலிரோ டெம்போ வாகனத்தில் சிலர் சென்றதை அப்பகுதி இளைஞர்கள் பார்த்துள்ளனர்.

சுமார் அதிகாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது வாகனத்தில் மணல் சென்றவர்களை இளைஞர்கள் தங்களது பைக்குகளில் சென்று துரத்தினர்.

2 பைக்குகளில் சீறிப்பாய்ந்த இளைஞர்கள் டெம்போவை துரத்தி சென்றனர். சாலை குறுகியதாக இருந்ததால் டெம்போவை திருப்ப முடியாமல் மணல் கொள்ளையர்கள் திணறினர். அப்போது குறுகிய சாலைக்கு திருப்ப முடியாமல் பிரபாரகன் என்பவர் வீட்டு சுவற்றின் மீது மோதி வாகனத்தை திருப்பியுள்னர்.

அப்போது இளைஞர்கள் பிடிக்க முற்பட்டபோது, குறுக்கே வந்தால் டெம்போவில் ஏற்றி கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

அந்த குறுகலில் இருந்து தப்பிய டெம்போவை, இளைஞர்கள் விடாமல் துரத்தி சென்றனர். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றும் டெம்போவை பிடிக்க முடியாததால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 625

0

0