அடையாளமே தெரியாமல் முகத்தை சிதைத்து கொடூரம்.. மதுபோதையில் இளைஞரை கொன்ற நண்பர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2024, 1:00 pm

மதுபோதையில் நண்பனை கொடூரமாக கொலை செய்த சக நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபர் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்பொழுது தலையில் கற்கள் மற்றும் மது பாட்டிலால் தாக்கியதில் வாலிபர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதை அடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் கொலையானவர் கோவை, சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது.

இவர் வேலைக்குச் செல்லாமல் இருந்து உள்ளார். இந்நிலையில் இரவு கண்ணன் சித்தாப்புதூரை சேர்ந்த தனது நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உட்பட ஐந்து பேருடன் சேர்ந்து சித்தாப்புதூரில் உள்ள ஒரு பாரின் மது அருந்தி உள்ளனர்.

பின்னர் நண்பர்களுடன் வாடகை காரில் பெரியநாயக்கன் பாளையம் வளமீட்பு பூங்கா பகுதி அருகே வந்து உள்ளார். அங்கு வைத்து அவர்கள் மீண்டும் மது அருந்தியதாக தெரிகிறது.

போதை தலைக்கேறியதும் கண்ணன் மற்றும் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நண்பர்கள் கண்ணனை கருங்கல் மற்றும் பீர் பாட்டிலால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். மேலும் பீர் பாட்டிலால் வயிற்றிலும் குத்தி உள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே கண்ணன் இறந்து போனார். இதை அடுத்து அங்கு இருந்து அவரது நண்பர்கள் தப்பியோடி தலைமறை ஆகிவிட்டனர்.

இந்த கொலை தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன் நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 380

    0

    0