தண்டவாளத்தில் மல்லாக்க படுத்து தூங்கிய போதை ஆசாமி மீது ஏறிய ரயில் : கீழறங்கி வந்த என்ஜின் டிரைவருக்கு ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2021, 11:47 am
train Escape -Updatenews360
Quick Share

கோவை : தண்டவாளத்தில் மது போதையில் தூங்கிய நபர் மீது ரயில் கடந்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை – மேட்டுப்பாளையம் இடையே தினமும் மெமோ ரயில் சேவை இயங்கி வருகிறது.எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும், 1781 பேர் நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இப்படியிருக்க இந்த ரயில் சேவை நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வழக்கம் போல சென்று கொண்டிருந்தது. அப்போது துடியலூர் பகுதிக்கும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் ஒருவர் மது போதையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அப்போது ரயிலில் இருந்து தொடர்ந்து சத்தம் எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை.
இந்தநிலையில் இஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்ட போது, ரயில் பெட்டி மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து நின்றது.

இதைதொடர்ந்து ரயில் நின்ற பின்பு நான்காவது பெட்டியில் இருந்த தர்மராஜ், மற்றும் ரயில் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மது போதையில் படுத்து இருந்தவரை கண்டுபிடித்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் அந்த நபரை தண்டவாளத்தில் இருந்து வெளியேற்றினர்

Views: - 197

0

0