கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது பந்தைய வகை மின்சார பைக்

26 January 2021, 9:56 am
Quick Share

கோவை: கோவையை சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பான பிராணா என்ற பந்தய வகை மின்சார வாகனத்தை கோவையில் இன்று மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்து வைத்தார்.

கோவையை சேர்ந்த எஸ்.வி.எம் என்ற நிறுவனம் ‘ப்ராணா’ என்ற மின்சாரத்தில் இயங்கும் பைக்-ஐ தயாரித்துள்ளது.

பார்ப்பதற்கு பெட்ரோல் வாகனத்தைப் போலவே இருக்கும் இந்த வாகனம் பந்தையங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு திறன் பெற்றுள்ளது.

இந்த வாகனத்தின் அறிமுக விழா கோவையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:

கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது இந்த வாகனம். தேவையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் முதல் முறையாக இந்த வாகனத்தை தயாரித்திருக்கும் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்.

கொரோனா காலத்தில் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் பலியாவார்கள் என்று சில வளர்ந்த நாடுகள் நனைத்தது.
இன்று நாம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சியால் உலகம் நம்மை வியப்போடு பார்க்கிறது.

இன்று கொரோனாவை சமாளித்து, வைரஸ் தொற்று பரவாமல் தடுத்து சாதித்து காட்டி தடுப்பு மருந்துகளை பல நாடுகளுக்கு அனுப்பும் அளவுக்கு இருக்கிறோம்.

பிறந்த மண்ணிற்கு என்ன செய்ய முடியும் என்பதை மனதில் கொண்டு நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவு தான் இந்த மின்சார பைக்.

தமிழக முதலமைச்சர் இரண்டு நாட்கள் கோவையில் சுற்றுப்பயணம் செய்தார். தமிழகத்திற்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் கோவையின் பங்கு குறித்தும் தெரிவித்திருக்கிறார்.

அந்த அளவு கோவை தொழில் துறையில் பின்னிப்பினைந்து உள்ளது

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இதனை தொடர்ந்து, எஸ்.வி.எம் நிறுவனர் மோகன்ராஜ் ராமசாமி கூறுகையில், “இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவர பலர் எனக்கு முன்னோடியாக இருந்தனர். ஒரு நாளைக்கு சராசரியாக மக்கள் 40 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்கின்றனர். இந்த ப்ராணா வாகனத்தை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 126 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். கிலோ மிட்டருக்கு சில பைசாக்களே செலவாகும்.

அதிக பட்சமாக மணிக்கு 123 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
தமிழகத்தில் இந்த வாகனத்திற்கு சாலை வரி கிடையாது ஜி.எஸ்.டி 5 சதவீதம் தான். டெல்லியில் இவ்வகை வாகனங்களுக்கு அரசு இன்னும் மானியம் கொடுக்கிறது. அதை மற்ற மாநிலங்களிலும் கடைபிடித்தால் நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 7

0

0