விவசாய சமுதாயத்திற்கு மூன்று திட்டம் அறிமுகம் : ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி தொடங்கியது!!

Author: Udayachandran
5 August 2021, 9:34 am
RCC Farmers- Updatenews360
Quick Share

கோவை : ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி சார்பில் விவசாய சமுதாயத்திற்கு உதவுதல் உள்ளிட்ட மூன்று திட்டங்கள் துவங்கப்பட்டுள்ள்ளன.

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டெக்சிட்டி ஆர்.ஐ. மாவட்டம் 3201 தலைவர் முகமது இர்பான் இந்த திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்த ‘விவசாய சமுதாயத்திற்கு உதவுதல்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தேனீ வளர்ப்புக்கென தேன் சேகரிக்கும் பெட்டிகள் அமைத்தல். மண் பரிசோதனை செய்தல், இயற்கை வழி விவசாயத்துக்கு தேவையான பொருட்கள் வழங்குதல். விவசாயிகள் தங்களுக்கு தேவையான இயற்கை உரங்களை தயார் செய்யும் முறைகள் பற்றி கற்றுத்தரப்படும்.

மண்புழு உரம் தயாரிக்கவும், பஞ்சகவ்யா தயாரிக்கவும் துவங்க ஆரம்ப கட்ட பொருட்கள் வழங்கப்படும். ரசாயண உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்கவும் கற்றுத்தரப்படும்.

பொருட்களை சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும். ஆர்சிசி டெக்சிட்டி 20 பண்ணைகளை தேர்வு செய்து, மதுக்கரை வேளாண் உதவி இயக்குனர் பேராசிரியர் ரத்தினம் மற்றும் வேளாண் பல்கலைக் கழகத்தின் கள நிபுணர்களுடன் இணைந்து செயலாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

டெக்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் மற்றும் விவசாயிகள் பிரதிநிதி செல்வராஜ் ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கவர்னர் ராஜசேகர் ஸ்ரீனிவாசன், மாவட்ட சேர்மன் மாருதி, தொழில் சேவை பிரிவு மாவட்ட தலைவர் முத்துராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 159

0

0