திருச்செந்தூர் சென்ற போது இரும்பு வியாபாரி வீட்டில் திருட்டு : 131 சவரன் கொள்ளை..!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2021, 10:49 am
Jewel Theft -Updatenews360
Quick Share

கோவை: கோவை கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 131 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் வேலவன் நகர் பகுதியை சேர்ந்தவர் தினகரன். இரும்பு வியாபாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு கோவை வந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முதல் தளத்தில் இருந்த கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த இரும்பு பெட்டகத்தை உடைத்து அதில் வைத்திருந்த 131 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தினகரன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் உடன் வந்த போலீசார் கதவு மற்றும் இரும்பு பெட்டகங்களில் பதிவான கைரேகைகள் மற்றும் அங்கு இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

அதேபோல் வீட்டை சுற்றி உள்ள முக்கிய தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து 131 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 297

0

0