இரண்டு மோட்டார் சைக்கிளை தோளில் சுமந்த இரும்பு மனிதர் : 42 மீ நடந்து இளைஞர் சாதனை!!

2 March 2021, 6:04 pm
Bike youth Record -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் ஒருவர் 270 கிலோ எடை உள்ள இரண்டு மோட்டார் சைக்கிள்களை தனது தோளில் 42 மீட்டர் சுமந்தபடி தூக்கி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கண்ணன். இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்ற இவர் ஏற்கனவே 9 கிலோ எடையுள்ள லாரியை கயிற்றால் கட்டி இழுத்து உலக சாதனை புரிந்தார்.

மேலும் இது போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி சோழன் உலக சாதனை புக் ஆஃப் ரெக்கார்டு என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட உடல் வலு தூக்கும் சங்கம் சார்பில் இன்று, கண்ணன் நாகர்கோவிலில் இந்து கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தனது தோளில் சுமந்தபடி 42 மீட்டர் தூரத்திற்கு நடந்தார்.

ஏற்கனவே நடந்த 30 மீட்டர் தூர சாதனையை முறியடித்து இவர் 42 மீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை சுமந்து சென்றுள்ளார். இந்த சாதனையை உலக சாதனை புக் ஆஃ ரெக்கார்டு என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இவர் உலக சாதனையை நிகழ்த்துவதற்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பயிற்சிகளையும் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதனை புரிய துடிக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு தமிழக அரசு வழிகாட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சாதனையை ஏராளமானோர் கண்டு ரசித்து பாராட்டினார்கள்.

Views: - 30

0

0