நடிகர் ரஜினிகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லையா? வெளியான தகவல்…

22 November 2020, 2:55 pm
rajini Health - Updatenews360
Quick Share

நடிகர் ரஜினிகாந்துக்கு வயது முதிர்வு மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சையால் அரசியல் பிரவேசம் வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அறிக்கை வெளியானது.

ஆனால் இது முற்றிலும் வதந்தி என்றும், ஆனால் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிவுரைகள் வழங்கியது உண்மை என்றும், தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இது குறித்து ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இதனால் ரஜினி அரசியலில் ஆர்வம் காட்டாமல் எப்போதும் போல படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டு சென்று வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ், இது முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளார்.

Views: - 22

0

0