எமனாக வந்த ஏமன் : ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா? போலீசாரிடம் வசமாக சிக்கிய பெரம்பலூர் இளைஞர்!!

19 April 2021, 5:32 pm
Chennai Youth Arrest -Updatenews360
Quick Share

சென்னை : சவுதி அரேபியாவிற்கு பணம் சம்பாதிப்பதற்காக ஓட்டுனராக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் தொடர்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் விஸ்வகுடி பகுதியைச் சேர்ந்த நிஷாமுதீன் என்பவருக்கு வேலூரில் கார் ஓட்டுனராக வேலை கிடைத்தது. அதன்பிறகு சவுதி அரேபியாவில் கார் ஓட்டுனராக வேலை கிடைத்தது.

இதற்காக தமிழகத்தில் இருந்து வேலைக்கான விசாவில், ஓராண்டுக்கு முன்பு துபாய் சென்றுள்ளார் நிஷாமுதீன். ஆனால் அந்த இளைஞர் ஏமன் நாட்டுக்கு சென்று வந்துள்ளார். ஏமன் நாட்டிற்கு செல்ல இந்திய அரசு தடைவிதித்துள்ள நிலையில், துபாயில் இருந்து ஏமன் சென்று 6 மாதம் தங்கியிருந்ததும் குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில் ஏமனில் இருந்து துபாய் வந்த அவர், அங்கிருந்து தமிழ்நாடு திரும்பி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தடையை மீறி ஏமன் சென்றதால், ஒருவேளை ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக இருக்கலாம் என் மத்திய உளவுத்துறை மற்றும் க்யூ பிரிவு போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இது குறித்து இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏமன் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் துபாயில் வேலை கிடைக்காததால், வேலை தேடி ஏமன் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் ஏமன் நாட்டிற்குள் நுழைய முடியாது என்ற நிலையில், இந்த இளைஞர் எப்படி அந்த நாட்டிற்குள் சென்றார், உடந்தையாக இருந்து உதவி செய்தவர் யார் யார் எனப்து குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Views: - 130

2

0