லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பாராத உச்சத்தில் அமர்ந்துள்ளவர் நடிகை நயன்தாரா. ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், குறுகிய காலத்திலேயே ரஜினியுடன் நடித்து பேரும் புகழும் சம்பாதித்தார்.
எந்தளவுக்கு நடிப்பில் கொடிகட்டி பறந்தாரோ, அதே போல அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் எழுந்தன. காதல் விவகாரத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த அவர், பின்னர் எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.
நயன்தாராவுக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு அதிகம் உள்ளதால், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்ட அவர், 2015ம் ஆண்டு முதல் இருவரும் காதலர்களாக வலம் வருகன்றனர். வருடங்கள் கடக்க இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் 37 வயதானாலும் தனது கேரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் கோவில் கோவிலாகவும், வெளிநாடுகளுக்கு சுற்றி கொண்டிருக்கிறார்.
லிவ்விங் டூகெதரில் வாழும் இவர்கள், சில காலங்களாக கோவில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் இவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக பேச்சுகள் எழுந்தன.
அதற்கு சமீபத்தில் இருவரும் கோவிலுக்கு சென்று எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நயன்தாரா நெற்றி வகிடில் குங்குமம் வைத்து சர்ச்சையானதுதான். ஆனால் இது தொடர்பாக இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த வருடம் திருமணம், அடுத்த வருடம் குழந்தை பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளார்.ஆனால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார்.
இது எப்படி சாத்தியம் என்றால், நயன்தாரா எடுத்த துணிச்சலான ஒரு முடிவுதான் அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களின் மவுசு குறைய கூடாது, அழகும் வசீகரமும் குறைந்து விடக்கூடாது என்பதால் ஹாலிவுட் நடிகைகள் சிலர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து வருகின்றனர். ஏன் சமீபத்தில் கூட பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி போன்றோர் வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.