வினேஷ் போகத் 100 கிராம் எடை ஏறியதற்கு பிரதமர் மோடி காரணமா? பங்கம் செய்த அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2024, 8:21 pm
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக நான்கு முனை போட்டி நிலவும். விஜய் வந்தால் தான் சாய்ஸ் இருக்கும். விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு எந்த பயமும் இல்லை, 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் புரட்சி இருக்கும். விஜய் வந்தால் தான் மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் கிடைக்கும்
.
தமிழகத்தில் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி ஆட்சி அமைப்போம் என கூறினால் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மாறும். கூட்டணி ஆட்சி அமைப்போம் என திமுக கூறப்போவதில்லை,.
அ.தி.முக முடிவு பற்றி எனக்கு தெரியாது. கூட்டணி ஆட்சி என பெரிய கட்சிகள் கூற வில்லை இருப்பினும் 2026-ல் நான்கு முனை போட்டி உறுதி.
2026-ல் தமிழகதத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் தேசிய ஜனநாயக கட்சி தீர்க்கமாக உள்ளது.
ஆகஸ்ட் 19ம் தேதிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் பழுக்கவில்லை. தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை. தந்தை மகனை ட்ரோல் செய்தால் நாங்கள் என்ன செய்வது.
வினேஷ் போகத் எடை அதிகரிப்பு காரணத்திற்கு மோடி தான் போஸ்டர் என திமுக ஒட்டப்படுகிறது. இதை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தமிழகத்தில் அரசியல் தரம் தாழ்ந்த நடக்கிறது. அறிவுபூர்வமான அரசியல் நடந்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும். பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் மீது பல வருடத்திற்கு முன்பு புகார் கொடுத்து இருந்தார்.,பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் உறவு குறித்து விளக்கம் அளித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பால் கனகராஜ் விசாரணைக்கு அழைத்தது சரி தான் தவறு தான் காவல்துறை அனைத்து வகையிலும் விசாரணை செய்வது வழக்கம் தான்” என்றார்.
0
0