தனி மாவட்டமாகிறதா பொள்ளாச்சி? முதலமைச்சரின் வருகையால் பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

23 January 2021, 12:12 pm
Pollachi - Updatenews360
Quick Share

கோவை : கோவை வந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி பகுதியில் நடைபெறும் பிரச்சாரத்தில் பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வலியுறுத்தியிருந்தார்.

பல்வேறு அரசியல் கட்சியனரும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மற்றும் நாளை கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

1857ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் சார் ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் திருப்பூர், உடுமலை, வால்பாறை, பொள்ளாச்சி வருவாய் வட்டங்கள் உள்ளடக்கி பொள்ளாச்சி வருவாய் கோட்டம் செயல்பட்டது.

30 ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து பிரிக்கட்ட திருப்பர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. வால்பாளை மக்கள் கோவைக்கு செல்ல 125 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியுள்ளது. பொள்ளாச்சியை மாவட்டமா அறிவித்தால் எளிதாக செல்ல முடியும் அதே போல, கிணத்துக்கடவு,பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, உடுமலை மடத்துக்குளம் போன்ற வருவாய் வட்டங்களை இணைத்தால் பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்க முடியும்.

பொள்ளாச்சி தனி மாவட்டமாக உருவெடுக்குமா இல்லையா என்பது இன்று முதலமைச்சர் பழனிசாமி மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் தெரியவரும். இதற்காக பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Views: - 13

0

0