கோவையில் இத்தனை வாக்குச்சாவடி மையங்களில் பிரச்சனையா? மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 5:01 pm
Cbe Collector -Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமிரன் செய்தியாளர்களை சந்தித்தர். அப்போது அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி பகுதிகளில் சாதாரண தேர்தல் காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு நடத்தி உள்ளோம்.

மாநகரில் 1290 வாக்குச்சாவடிகளில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அதில் கண்காணிப்பு கேமரா பொருத்தி நேரலையாகவே நாங்கள் ஆய்வு நடத்தி வருகிறோம். இன்று காலை மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வாக்குசாவடிகளில் 7 இடங்களில் சிறிய பிரச்சனை இருந்தது.

உடனடியாக அதனை நாங்கள் சரி செய்தோம். சிறிய பிரச்சனைகள் சில பகுதிகளில் இருந்தது பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று காவல்துறையினரை அனுப்பி உடனடியாக பிரச்சனைகளை சரி செய்து வாக்காளர்களுக்கு எந்த பயமும் இல்லாமல் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

ராமநாதபுரம் பகுதியில் ஒரு சில கட்சிகள் மோதல் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அது சம்பந்தமான காவல் நிலையத்தில் புகார் பதிவாகவில்லை புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜ், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 595

0

0