தடுப்பூசி மையங்களில் கர வேஷ்டி குவிய இதுதான் காரணமா? இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையும்..!!

Author: Udayachandran
1 August 2021, 7:06 pm
Vaccine - Updatenews360
Quick Share

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களின் ஆடை விலகுவதை வேடிக்கை பார்க்க அரசியல் கட்சியினர் அலைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறிப்பாக மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட மக்கள் முன்வரவேண்டும் என கூறியது. இதையடுத்து மாநில அரசுகளின் வழிமுறைப்படி கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மஹா.,வில் வீடு தேடி தடுப்பூசி: சோதனை முறையில் துவக்க திட்டம் | Dinamalar  Tamil News

இந்த நிலையில் தடுப்பூசி போட வரும் பெண்கள் வெளியே சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. காரணம், தடுப்பூசி போடப்படும் பகுதிகளில் பெண்களுக்கான தடுப்பூசி அறைகளில் கர வேட்டி நடமாட்டம் அதிகம் காணப்படுவதுதான்.

கரவேட்டி வந்தால் என்ன என்று சுலபமாக நினைக்காதீர்கள்.. ஆண்கல் பலர் பெண்கள் தடுப்பூசி போடும் மையங்களில் போட்டோ எடுக்க வேண்டும் என கூறி, பெண்கள் ஆடை விலகுவதை போட்டோ எடுத்து உலகத்திற்கு காட்டி விடுகின்றனர். அதை அருகில் கர வேட்டிக்காரர்களும் கண்சிமிட்டாமல் பார்க்கின்றனர்.

தடுப்பூசி போட வேண்டும் வெளியேறுங்கள் என்று சொன்னால் தடுப்பூசி போட மறுத்து விடுவார்களோ என பெண்கள் அஞ்சி அரசியல்வாதிகளுடன் வாக்குவாதம் செய்யாமல் அமைதி காத்து வரும் சூழலில் உள்ளனர். வெள்ளை சொள்ளையுமாக வந்து இந்த வேலைதான் கவனிக்கிறார்களோ என்ற எண்ணமும் பெண்கள் மத்திய எழுந்துள்ளது.

போட்டோ எடுக்கிறோம் என்ற போர்வையில் வக்கிர பார்வை பார்க்கும் கர வேஷ்டியில் சுற்றும் இவர்களை என்ன சொல்வது என்று பெண்களும் தங்களுக்குள்ளே குமுறுகின்றனர்.

நகர்புறங்களில் உள்ள பெண்கள் சுடிதார் அல்லது, ஸ்லீவ்லெஸ் போன்ற ஆடைகளை அணிந்து சுலபமாக இந்த பிரச்சனையை சமாளிக்கின்றனர். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் இது போன்ற சூழல்களில் சிக்குகின்றனர். காரணம் அவர்கள் சேலை அணிவதால்தான்.

தடுப்பூசி பற்றாக்குறை- சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்கள் நாளை இயங்காது -  TopTamilNews

இந்த பிரச்சனையை எப்படி தவிர்ப்பது? பொதுவாக பெண்கள் இறுக்கமான ஜாக்கெட் அணியும் பழக்கம் உடையவர்கள். தடுப்பூசி போடும் கையில் ஒருபக்கம் ஆடை விலக்கும் போது போட்டோ எடுக்கிறோம் என ஆண்கள் உள்ளே நுழைவதும், அதிலும் கரவேஷ்டிக்காரர்கள் இதை உற்று நோக்குவது பெண்களை கடும் சிரமத்துக்கு ஆளாக்கி வருகிறது.

இதனால் அனைத்து தடுப்பூசி மையங்களிலும், பெண்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும், அதில் பெண்களுக்காக தடுப்பூசி போடும் பணியில் பெண் மருத்துவர்கள் செவிலியர்கள் ஈடுபட வேண்டும் என காரமடை வெள்ளமடை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பெண்களுக்கான தடுப்பூசி போடும் அறையில் பெண் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபட் வேண்டும் என்றும், எந்த அரசியல் தலையீடு இல்லாமல் டோக்கன் வழங்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் ஆளுங் கட்சி தரப்பினர் மீது அதிக குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் தவிர அவர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு கோவை மாவட்டம் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Views: - 258

0

0