“நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்” என சத்குரு கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ நாளை மறுநாள் (ஆக.12) தொடங்க உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், “நம் பாரத கலாச்சாரத்தில் வாழ்க்கையையே ஒரு விழாவை போல் கொண்டாட்டமாக வைத்து இருந்தோம். நம் தேசத்தில் 365 நாட்களும் ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். விழா என்றால் வேலை செய்ய கூடாது; விடுமுறை எடுக்க வேண்டும், அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது அல்ல. எப்போது நீங்கள் எல்லா செயல்களையும் கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்.
நம் கிராமங்களில் உழவு செய்யும் போது, நெசவு நெய்யும் போது, சமையல் செய்யும் போது, குழந்தையுடன் விளையாடும் போது என எந்த செயல் செய்தாலும் அதில் ஒரு பாட்டும் கொண்டாட்டமும் இருக்கும். எப்போது நம் வாழ்வில் இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம் வரும்.
நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். உங்களுடைய பாட்டி சீரியஸ் ஆக இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் போவதற்கு தயாராகிவிட்டார் என்று தானே அர்த்தம். நீங்கள் அப்படி ஆக கூடாது. எப்போதும் சுறு சுறுப்பாகவும் புத்துணர்வாகவும் இருக்க வேண்டும். உங்களுக்குள் விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலேயே குடும்பத்தினருடன் விளையாடி கொள்ளலாம்.
கிராமங்களில் கூட இப்போது வெறும் பணத்தை மட்டும் கணக்கு போட்டு கொண்டு இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. சமூகங்களில் ஜாதி, மதம் என பல விதமான பாகுபாடுகள் வந்துவிட்டது. இதற்காக தான் ஈஷா கிராமோத்சவம் திருவிழா. 2004-ம் ஆண்டு இதை முதல் முறையாக தொடங்கினோம். இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் எல்லாம் நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள் கிடையாது. வீட்டில் சமையல் செய்யும் பாட்டியும் அவருடைய பேரன் பேத்திகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில் விளையாடுகிறார்கள்.
இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில் வேறு எங்கும் இல்லை என கூறலாம். அந்தளவிற்கு மிகப் பெரிய அளவில் மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது நம் பாரத தேசம் பொருளாதாரத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் நம் வாழ்வில் விளையாட்டும் கொண்டாட்டமும் இல்லாமல் போய்விட்டால் பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?” என வீடியோவில் சத்குரு கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.