சொந்த ஊருக்கு வந்த இஸ்ரோ தலைவர் சிவன் : அம்மன் கோவில்களில் சிறப்பு தரிசனம்!!

6 February 2021, 1:25 pm
ISRO Sivan - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : வரும் 28 ம்தேதி இஸ்ரோ மேலும் ஒரு விண்கலத்தை விண்ணிற்கு செலுத்த உள்ள நிலையில் இஸ்ரோ இயக்குநர் சிவன் தனது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே சரக்கல்விளை பகுதியில் உள்ள பத்திரகாளி மற்றும் முத்தாரம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இஸ்ரோ தலைவர் சிவன் நாகர்கோவில் அருகே கீழ சரக்கல் விளை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆவார் ஊரில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று திடீரென்று அவரது சொந்த ஊரான கீழ சரக்கல்விளை வந்தார். அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார் இஸ்ரோ சார்பில் விண்வெளியில் வரும் 28 ந்தேதி மேலும் ஒரு ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்த உள்ள நிலையில் அவர் சொந்த ஊரில் உள்ள கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்தார்.

மேலும் அப்பொழுது கன்னியாகுமரியில் இஸ்ரோ சார்பில் இந்திய விண்வெளி ஆராட்சி மையம் அமைக்க வேண்டும் என இன்று சொந்த ஊரான நாகர்கோவிலில் சரக்கல்விளைக்கு வந்த இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களிடம் குமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் செந்தில் முருகன் கோரிக்கை மனு அளித்தார்.

Views: - 0

0

0