சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தவறு : பவர் ஸ்டார்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2021, 4:30 pm
Power Star -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள அரசு சினிமாத்துறைக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லாயல்மில் காலனியில் உள்ள பைரவா மஹாலில் இலக்கியா உலா மற்றும் ரெட் க்யூப் சினிமா என்ற அமைப்பு சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் மற்றும் சிறப்பாக சமூக ஆர்வலர்கள், கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், திரைப்பட பாடகர் திவாகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விரு வழங்கி சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவிற்க்கு ஓடிடி உதவியாக இருந்தது.

ஆனால் தற்பொழுது திரையரங்குகள் திறக்கபட்டுள்ளதால் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாவதை தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும்.திரையரங்குகள் திறக்கப்பட்டு புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.

மக்களும் திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். மக்கள் திரையரங்குகளுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். திரையரங்குகளை நம்பி பல தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனாவினால் 2 ஆண்டுகளில் பலர் வாழ்வாதரம் இழந்துள்ளனர். இனி இது போன்று நடக்கமால் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அதிகமான சம்பளம் சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டுதான் வாங்குகிறார்கள் என்பதல்ல, எல்லா துறையில் வாங்குகிறார்கள், உதரணமாக மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய எத்தனையோ லட்சங்கள் வாங்குகின்றனர்.

ஒரு சிலர் செய்கின்ற தவறு காரணமாக சினிமாவை சேர்ந்தவர்கள் வரி கட்டமாட்டர்கள் என்று நினைப்பது தவறான கணக்கு என்றும், புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள அரசு சினிமாத்துறைக்கு நல்லது செய்வதாக கூறியுள்ளனர்.

தற்பொழுது புதிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள அரசு சினிமாத்துறைக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கொடுப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை என்றார்.

Views: - 428

0

0