தமிழகத்தில் 5 நாட்களுக்கு சாரல் மழை பெய்யும்…நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் வெளியிட்ட குளு குளு அறிவிப்பு!!

Author: Aarthi Sivakumar
14 September 2021, 4:22 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு சாரல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16 மற்றும் 17ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Views: - 142

0

0