பார்த்தா ரொம்ப பரிதாபமா இருக்கு… திமுகவுக்கு எதிராக களமிறங்கிய திருமாவளவன் : அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 6:57 pm
Thirumavalavan - Updatenews360
Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பரிசோதனை, தோள் வியாதி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட திருமாவளவன் தனக்கும் ரத்த கொதிப்பு உள்ளதா சர்க்கரை நோய் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் சம்பவம் நடைபெற்று 40 நாட்கள் ஆகியும் இது நாள் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதன் காரணமாகத்தான் தமிழக அரசு சிபிசிஐடி போலீஸ் இடம் இந்த வழக்கை ஒப்படைத்தது.

இருப்பினும் சிபிசிஐடி போலீஸ் சார் குற்றவாளியை கண்டுபிடிக்காதது வருத்தமளிக்க கூடியது. விரைவில் குற்றவாளிகளை யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் சிறப்பாக தான் செயல்படுகிறது ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை குற்றவாளிகள் இதனால் வரை கைது செய்யப்படவில்லை.

பல நேரங்களில் அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காததன் காரணமாகவே இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது தாமதப்படுகின்றது.

விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முதல்வர் இந்த வழக்கில் தனி கவனம் செலுத்தி விரைந்து குற்றவாளியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வரை பொறுத்த வரை ஜாதி பாகுபாடு பார்ப்பது கிடையாது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒருங்கிணைத்து தான் இந்த ஆட்சியை நடத்தி வருகிறார்.

கூட்டணி என்பது வேறு இது போன்ற சம்பவங்களில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் விமர்சனம் செய்வது என்பது வேறு. பல நேரங்களில் அரசுக்கு எதிராக நாங்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளோம்.

வேங்கைவயல் பிரச்சனையில் இதுவரை அதிமுக பாஜக இதனால் வரை குரல் எழுப்பாதது ஏன்? சீமான் என்னை பற்றி அரசியல் காரணங்களுக்காக விமர்சனம் செய்து வருகிறார் நான் ஒரு ஜாதிக்கு மட்டும் சப்போர்ட் செய்வது கிடையாது.

மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் சம்பவம் நடந்து இந்த தினங்களில் நடவடிக்கை எடுத்தது பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும் அதன் பிறகு குற்றவாளிகள் இது நாள் வரை கைது செய்யப்படாதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி, இந்த தேர்தலில் அதிமுகவின் நிலை பரிதாபமாக உள்ளது. தற்போது அதிமுக பிளவை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற பார்க்கிறது, அதிமுக தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்,

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வாக்கு வங்கிக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதவில்லை. அதே வேளையில் பாஜவிற்கு எதிராக ஓரணியில் சேர்ந்திருப்பதை நான் வரவேற்கிறேன்,

நான் ஜாதிய தலைவராக இல்லாமல் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் களத்தில் நின்று போராடி வருகிறேன் என கூறினார்.

Views: - 482

0

0