ஜெ., பிறந்தநாள் : கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீபம் ஏற்றினார் அமைச்சர் எஸ்.பி வேலுமணி!!

24 February 2021, 6:51 pm
Sp Velumani Deepam - Updatenews360
Quick Share

கோவை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலில்தாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக பல்வேறு நலத்திட்டங்கள், இலவச திருமணங்கள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அதிமுக.,வை சிறப்பான முறையில் வழி நடத்தி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் இன்று மாலை 6 மணியளவில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதன் பேரில் தமிழகம் முழுவதும் தீபம் இன்று ஏற்றப்பட்டுள்ளது.

கோவையில் இதய தெய்வ மாளிகையில் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த அரசு பல்வேறு திட்டங்களை தந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் இருட்டை மட்டுமே மக்களுக்கு காண்பித்தனர். ஜெ., ஆட்சியில் முழு வெளிச்சம் மற்றும் எண்ணற்ற திட்டங்கள் தந்தார். அந்த வகையில் இந்த வெளிச்சம் தொடர வேண்டும். 2022லும் மீண்டும் எளிமையான சாமானிய முதலமைச்சர் நாட்டை ஆள வேண்டும். ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி போய்விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி அருண்குமார், முன்னாள் அமைச்சர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 2

0

0