குன்னூரில் கோடை சீசனை வரவேற்ற ஜகரண்டா : மலர்களை பார்த்து பரவசமடைந்த சுற்றுலா பயணிகள்!!

9 April 2021, 7:29 pm
Jagaranda Flowers -Updatenews360
Quick Share

நீலகிரி : குன்னுாரில் கோடை சீசனை வரவேற்கும் வகையில் மேட்டுப்பாளையம் குன்னூர் மலைபாதையில் பூத்து குலுங்கும் ஜகரண்டா மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் ம‌லைபாதையில் அமைந்துள்ள ஜகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தின் போது பிரேசில் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த வகை மரங்கள் பல நூற்றாண்டுகளை கடந்தும் நிற்கின்றன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதன் சீசன் காலம் என்பதால் இக்காலக்கட்டத்தில் மரத்தில் உள்ள இலைகள் முழுமையாக உதிர்ந்து ஊதா நிறங்களில் மலர்கள் மட்டும் பூத்து குலுங்குகின்றன. மேலும் குன்னுார் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையினால் குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதையிலுள்ள வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பியுள்ளன.

இந்த பசுமைக்கு இடையில் ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் தேயிலை தோட்டங்களுக்கு இடையே உள்ள மரங்களில் ஜகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Views: - 35

0

0