இறப்பதை முன்னரே அறிந்த ஜல்லிக்கட்டு காளை : வரப்புகளில் முட்டி முட்டி உயிரை மாய்த்த சோகம்!!

Author: Udayachandran
12 October 2020, 11:42 am
Bull Dead - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரத்தில் கடந்த, 5 ஆண்டுகளாக பல மாடுபிடி வீரர்களுக்கு தண்ணி காட்டிய ஜல்லிகட்டு காளை தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் அதிகாரக் கோட்டை வணங்காமுடி கருப்பர் கோவிலைச் சேர்ந்த கோவில் மாடு வருடம்தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு தினத்தன்று வாடிவாசலில் இந்த காளை அவிழ்த்து விடப்பட்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் தங்களது ஊரில் பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக கோவில் மாட்டை வளர்க்க முடியாமல் தவித்து வந்த சூழ்நிலையில் தாராபுரத்தை சேர்ந்த இளைஞர் கனகராஜ் என்பவருக்கு கோவில் மாடை பாதுகாத்து பராமரிப்பத்தற்காக அனுப்பி வைத்தார்.

அவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, வார விடுமுறை நாட்களில் தனது ஜல்லிக்கட்டு காளையை ஆர்வமுடன் பார்த்து பராமரித்தும் வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு காளை கண்களில் தண்ணீர் வடிந்து வந்த நிலையில் மாட்டின் உரிமையாளர் கருப்பர் தனது ஜல்லிக்கட்டு காளை சூடாக இருக்கும் என்று நினைத்து நீரில் குளிப்பாட்டியுள்ளார்.

அதன்பின்பு கண்களில் மீண்டும் நீர் வடிந்து கொண்டே இருந்ததால் ஜல்லிக்கட்டு காளை வேதனை தாங்க முடியாமல் வரப்புகளில் முட்டி தனது உயிரை மாய்த்துக் கொண்டது. அதன் பிறகு மருத்துவரிடம் காண்பிக்கும் போது மாட்டிற்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது.

இந்த காளையை கருப்பர் தனது பிள்ளையாக நினைத்து வளர்த்து வந்ததாகவும் ஒவ்வொரு ஜல்லிகட்டு போட்டிகளில் பல பரிசுகளை வென்று வந்த காளை தற்போது தன்னுடன் இல்லாததால் மனவருத்தம் அடைவதாக கருப்பர் வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் தாராபுரத்தில் ஜல்லிக்கட்டு காளையை பராமரித்து வந்த கனகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜல்லிக்கட்டு காளையை தனது குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் எப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் செய்வார்களோ அதன் முறைப்படி காளைக்கு தனது குடும்பத்தில் ஒருவரைப் போல மேளதாளங்கள் முழங்க ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

மேலும் தாராபுரத்தில் இருந்து அவரின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அதிகார கோட்டைக்கு நெல்கொண்டபட்டி கிராமத்திற்கு காளையை நல்லடக்கம் செய்ய கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

Views: - 48

0

0