இறைச்சி கடைகளை 15ம் தேதி திறக்க தடை: சென்னை ஆணையர் உத்தரவு…!!

13 January 2021, 1:21 pm
Meat_UpdateNews360
Quick Share

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகிற 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சி கூடங்கள் அனைத்தும் வருகிற 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 15ம் தேதி அனைத்து இறைச்சி கூடங்கள், இறைச்சி கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம். அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 8

0

0