தொடர் முகூர்த்த தினங்கள் : மல்லிகை ஒரு கிலோ ரூ.630… ஒரே நாளில் பூக்கள் விலை கடும் உயர்வு!!

10 November 2020, 6:11 pm
Sathy Flowers Onam- Updatenews360
Quick Share

ஈரோடு : நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முகூர்த்த தினங்கள் வருவதால், சத்தியமங்கலம் பூக்கள் சந்தையில், ஒரே நாளில் அனைத்து வகை பூக்களின் விலை இரு மடங்காக உயர்வு

சத்தியமங்கலம் பூக்கள் சந்தையில் கடந்த சில தினங்களாக இருந்த பூக்கள் விலையை விட இன்று ஒரே நாளில், இரு மடங்காக அனைத்து வகை பூக்களின் விலையும் உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மல்லிகைப்பூ நேற்று கிலோ 297 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று கிலோ 630 வரை விற்பனையாகிறது. நேற்று 120 ரூபாய்க்கு விற்பனையான முல்லை 280 ரூபாய்க்கும், 170 ரூபாய்க்கு விற்பனையான காக்கடா 400 ரூபாய்க்கும்,34 ரூபாய்க்கு விற்பனையான செண்டுமல்லி 42 ரூபாய்க்கும், நேற்று 250 ரூபாய்க்கு விற்பனையான ஜாதிமல்லி இன்று 400 ரூபாய்க்கும், 550 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் 650 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நாளைய தினம் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம், நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த தினம் என்பதாலும், அதிக பனிப்பொழிவு துவங்கி விட்டதால், பூக்களின் வரத்து குறைந்து விட்டதும் தான் காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 30

0

0