ஜெட் விமானம் வெடித்து விபத்து? புகையுடன் வானில் வெடி சத்தம் கேட்டதால் பதற்றத்தில் ஓடிய மக்கள் : திருப்பூர் அருகே நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 1:39 pm
Jet Flight - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரத்தில் வானத்தில் பறந்த ஜெட் விமானத்தில் இருந்து அரைவட்ட வெள்ளை புகையுடன் வெடிச் சத்தமும் கேட்டதால் மீண்டும் தாராபுரம் சுற்றுவட்டார 50 கிலோ மீட்டர் தூர கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீரென காலை 10.30 மணிக்கு ஊரையே குலுங்கும் அளவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் வானில் அரைவட்ட புகை மண்டலமும் தோன்றியது. சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த வெடி சத்தத்தை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது ஜெட் விமானம் ஒன்று புகையைக் கக்கிக் கொண்டு சென்றது.

தோற்றத்தில் அரைவட்ட புகை மண்டலம் வானத்தில் பரவிக் கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் நில அதிர்வு காரணமா அல்லது உதகை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டதை போல் சம்பவம் ஏதாவது நிகழ்ந்ததா என ஒருவருக்கு ஒருவர் செல்போன் மூலம் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக விசாரித்துக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தாராபுரம் காவல் துறையும் வருவாய்த் துறையும் இதுவரை முறையான விளக்கம் அளிக்கவில்லை. இதேபோன்று தாராபுரம் அருகே செயல்பட்டு வரும் பவர்கிரிட் மின்சார உற்பத்தி நிறுவனத்தில் இருந்தும் தாராபுரத்தில் குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் வீட்டை விட்டு அலறி அடித்தபடி வெளியே அதிர்ச்சியுடன் வானத்தையே பார்த்துக் கொண்டுள்ளனர்.

இதனால் தாராபுரம் மூலனூர் குண்டடம் இதனைச் சுற்றியுள்ள இருபதுக்கு மேற்பட்ட நகர கிராம பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 992

0

0