தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை..!!

27 January 2021, 12:23 pm
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்றைய தினத்தில் தங்கம் விலை எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், மகிழ்ச்சியூட்டும் விதமாக இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,621 ஆகக் குறைந்துள்ளது.

நேற்று ஒரு கிராம் 4,636 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 37,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 120 ரூபாய் குறைந்து 36,968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கம் நேற்று 40,160 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 120 ரூபாய் குறைந்து 40,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.71.30 ஆக இருந்தது. இன்று ரூ.70.80 ஆகக் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 70,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

Views: - 0

0

0