லிஃப்ட் கொடுப்பது போல நடித்து மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகள் அபேஸ் : சிசிடிவி உதவியுடன் தம்பதிக்கு வலை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 9:19 pm
Farud Couples- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே கொரோனா தடுப்பூசி போட பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மூதாட்டிக்கு தின்பண்டத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை திருட்டில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் 65 வயதான கூலி வேலை செய்துவரும் மீனம்பாள் கொரோனா தடுப்பூசி போட செல்வதற்காக அங்குள்ள அய்யனார் கோவில் முன்பாக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கணவனும் மனைவியும் நாங்களும் ஊசி போடத் தான் செல்கிறோம் எங்களுடன் வாருங்கள் என்று கூறி அவரை தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

வேடசந்தூர் ஆத்துமேடு அருகே இருந்த ஒரு டீ கடையில் நிறுத்தி மூதாட்டிக்கு டீயும், பன்னும் வாங்கி கொடுத்துள்ளனர். டீ மற்றும் பன்னை சாப்பிட்ட மீனம்மாள் சிறிது நேரத்திலேயே சுயநினைவின்றி மயங்கியுள்ளார்.

அதன் பிறகு மீனம்பாள் காதில் அணிந்திருந்த அரை பவுன் கம்மலையும் கால் பவுன் மூக்குத்தியையும் கழட்டிக்கொண்டு வேடசந்தூரில் இருந்து கரூர் செல்லும் நான்குவழிச் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் மில் அருகே சாலை ஓரமாக மீனம்மாவை படுக்க வைத்துவிட்டு, தப்பிச்சென்றுவிட்டனர்.

அவ்வழியாக சென்றவர்கள் மீனாம்பாள் தனியாக கிடந்ததைக்கண்டு, அவரை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனம்மாவை தம்பதிகள் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. வேடசந்தூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 276

0

0