கீழடிக்கு குடும்பத்தினருடன் வந்த நீதிபதி கிருபாகரன் : ஆறாம் கட்ட அகழாய்வு குறித்து ஆய்வு!!

10 October 2020, 3:53 pm
Judge Kirubakaran - Updatenews360
Quick Share

மதுரை : கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட ஆய்வுப் பணியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தனது குடும்பத்தினருடன் ஆய்வு செய்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தனது குடும்பத்துடன் கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட ஆய்வு பணியை பார்வையிட்டார். அப்போது தொழில் துறை இயக்குனர் சிவானந்தம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெய்காந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட முப்பத்தி எட்டு அடி ஆழம் கொண்ட உரைகிணறு ஆகியவற்றை தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் நீதிபதிக்கு விளக்கினார்.

மேலும் அகழ்வாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட முத்துக்கள் கிணறுகள் மற்றும் எடை கற்கள் என அனைத்தையும் நீதிபதி பார்வையிட்டார்.

அதனைத தொடர்ந்து தொழில்துறை இயக்குனரிடம் விளக்கம் பெற்றார் தொடர்ந்து அகலாய்வு நடந்த இடத்தின் உரிமையாளருக்கு நீதிபதி நன்றி தெரிவித்தார் .

Views: - 72

0

0