இப்பவே இப்படி , இனி ஆட்சிக்கு வந்தா…?? வெளிச்சத்திற்கு வந்த உதயநிதியின் பித்தலாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2021, 6:00 pm
Udhayanithi stalin - Updatenews3
Quick Share

சென்னை : சொத்து விபரங்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து மறுபரிசீலனையும் நிறைவு பெற்றது.

திமுக வேட்பாளர் பட்டியலில் ஸ்டாலினின் வாரிசான உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் உதயநிதி தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் உண்மையை மறைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி மற்றும் அவரது தாயார் துர்கா ஸ்டாலின் இருவரும் ஸ்நோ ஹவுசிங் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ளது மறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு 11.62 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை அருகே இந்த நிறுவனத்தின் பெயரில் வீடு வாங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீட்டை துர்கா ஸ்டாலின் வசிக்க இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இங்குதான் ஸ்டாலின் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வேட்பு மனுவில் உதயநிதி வருமானம் குறைவாக காட்டப்பட்டுள்ளதாகவும் வீடு வாங்கியதற்கான வருமானம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதே போல் 2016 – 2017ம் ஆண்டில் உதயநிதி வருமானம் 4.12 லட்சம் என்றும், ஆனால், 1.77 கோடி ரூபாய் மதிப்பில் ரேஞ்ரோவர் சொகுசு காரை 2016ம் ஆண்டு வாங்கியுள்ளார் என்றும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் நடவடிக்கைகள் போலியாக செயல்படுவதாகவும், தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக சார்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 101

1

0