நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை பெரிதாக்க வேண்டாம்: முதலமைச்சர் ஆதரவு

16 September 2020, 9:44 pm
Quick Share

புதுச்சேரி: நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து யதார்த்தமானது அதை நீதியரசர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா நோய்த்தொற்று மற்றும் இறப்பை குறைக்கும் வகையில் வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், புதுச்சேரியில் நோய்த்தொற்று குறைக்க துணைநிலை ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என கூறினார். நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளதாகவும்,

அவர் நீதிமன்றத்தை பற்றி கூறியது எதார்த்தமான வார்த்தை இதனை நீதிமன்றம் பெரிது படுத்தக்கூடாது என்றும், அவர் எந்த உள்நோக்கமும் இன்றி கூறியுள்ளார். இதை ஒரு பொருட்டாக கருதாமல் விட்டுவிட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என்றும் எதார்த்தமாக பேசியதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நீதியரசர்களிடம் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Views: - 0

0

0