தமிழக அரசுக்கு ‘இதில்’ உரிமையில்லை – கே.பாலகிருஷ்ணன்

Author: Hariharasudhan
7 November 2024, 5:52 pm

ஒருவரின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மதுரை: மதுரை மாவட்டம், புதுராமநாதபுரம் சாலை பகுதியில் கட்டப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (நவ.7) திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “இந்தியா, தமிழகத்தில் சோசலிசத்தை அமைக்க பாடுபட்டு வருகிறோம். பாஜக அரசு, ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர முயற்சிக்கிறது.

தமிழக நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகும் கூட, மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறது. வக்பு வாரிய சட்டத்தை அமல்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். சாதாரண போராட்டத்திற்கு கூட காவல்துறை அனுமதி கொடுப்பதில்லை. காவல்துறை தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ளதா? இல்லையா? என கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் காவல்துறை சித்திரவதைகள் அதிகரித்து வருகிறது. காவல்துறை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது, தமிழக அரசு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும். தமிழக அரசு ஒரு மதத்திற்கு ஆதரவாக செயல்படக் கூடாது. அதே வேளையில், மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

மக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். தமிழகத்தில் புதிதாக நிறைய கட்சி தொடங்கி உள்ளனர். விஜய் மாநாட்டை விட மிக பிரமாண்டமான விழாக்கள் நடைபெற்றுள்ளது. விஜயகாந்த் கட்சி தொடங்கும் போது, விஜய்க்கு வந்த கூட்டத்தை விட பலமடங்கு கூட்டம் வந்தது. விஜய் கட்சி தொடங்கி விட்டார் என்பதற்காக கருத்து சொல்ல முடியாது.

Vijay angry photo

விஜய் களத்திற்கு வந்த பின்னர் தான் கருத்து சொல்ல முடியும். விஜய்யின் அரசியல் வருகை உள்ளிட்ட அறிவிப்புகளால் திமுக கூட்டணிக்குள் எந்தவொரு சலசலப்பையும் ஏற்படுத்தாது. இது குறித்த கருத்துக்களை திமுக கூட்டணியில் உள்ளவர்கள் மிகத் தெளிவாக கூறி விட்டனர். மக்கள் பிரச்னைகளுக்காக திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகளுடனும் பயணித்து வருகிறோம். கூட்டணிக்குள் இருப்பதால் சாம்சங் பிரச்னையில் தலையிடாமல் இருக்க முடியுமா?.

இதையும் படிங்க: ‘ கலைஞருக்குப் பிறகு நான் தான்”.. எச்சரிக்கை இருந்தும்.. துரைமுருகன் பதில்!

தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறோம். ஆகவே இதற்கும், அதற்கும் சம்பந்தமில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதை அவர் தான் விளக்க வேண்டும். அதிகாரத்தில் பங்கு கொடுத்தால் தான்,கூட்டணிக்கு வருவோம் என்பதே தவறானது. கூட்டணிக்கு வந்தால் தான் பதவி என்றால், பதவிக்காக கூட்டணிக்கு வருவது போல ஆகிவிடும். கூட்டணியில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனும் கோஷம், எந்த தாக்கத்தை ஏற்படுத்தி விடப் போகிறது?

பாஜகவை எதிர்க்கும் நிலைப்பாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, பதவி தருகிறோம் என சொன்னால் கூட திமுக கூட்டணியை உடைக்க முடியாது. விஜய்க்கு யாரோ சொல்லிக் கொடுத்து உள்ளனர். அதை அவர் மேடையில் பேசியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 172

    0

    0