கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி…

Author: kavin kumar
30 December 2021, 4:51 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி தண்ணீரை திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக கே.ஆர்.பி அணை உள்ளது. இந்த அணையில் தற்போது மொத்த கொள்ளவில் 52 அடியில் 51 – 15 அடி தண்ணீர் உள்ளதால் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்ட வேண்டும் என பாசன விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தண்ணீரை திறந்து விட்டார்.

இதன்மூலம் அணையின் இடது மற்றும் வலது புறக்கால்வாய்கள் மூலம் சுண்டே குப்பம், பெரியமுத்தூர், தளி, பையூர், பாலோ குளி உள்ளிட்ட 16 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 9012 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் 120 நாள்களுக்கு தண்ணீர் 180 அன அடித்தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை
பாசன விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறும்மாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் உதவி பொறியாளர் காளிப் பிரியன் உள்ளிட்ட பாசன விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Views: - 258

0

0