‘கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை’ – மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் உறுதி

10 August 2020, 4:16 pm
Quick Share

விவசாயிகள் நலனுக்காக கலப்பின பசுக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளரச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியம் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது :

கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கி உள்ளது. இருப்பினும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

உலக நாடுகள் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், தமிழகம் கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடை வளர்ப்போருக்காக கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உதகையில் ரூ.48 கோடி மதிப்பில் கால்நடை விந்தணு ஆராய்ச்சி மையம் அமையவுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 10

0

0